×

தியாகராஜர் பாலி., கல்லூரிக்கு 8வது முறையாக தேசிய விருது

சேலம், அக்.30: சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு 8வது முறையாக தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.   இது குறித்து தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா கூறியதாவது:
ஆண்டுதோறும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம், அகில இந்திய தொழிற்கூட்டமைப்பு இணைந்து சிறப்பாக செயலாற்றி வரும் தொழிற்கல்வி நிலையங்களுக்கு, தேசிய அளவிலான ஏஐசிடிஇ என்ற உயரிய விருதை வழங்குகிறது. இந்த ஆண்டு 3000 கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம் பிடித்து தேசிய விருது பெற்றுள்ளது. மாணவர்களுக்கு புரிந்துணர்வோடு பாடம் கற்பிப்பதன் பயனாக மகேந்திரா அண்டு மகேந்திரா, சிஎன்சி உள்ளிட்ட பல நிறுவனங்கள், எங்கள் கல்லூரியுடன்  இணைந்து கடந்த 3 வருடங்களாக மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியை அளித்து வருகின்றன.

60க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளதால், கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் கல்லூரி மாணவர்கள் 178 சதவீதத்துக்கும் மேலாக, மிகச் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை, எங்கள் கல்லூரி 8 தேசிய விருதுகளை பெற்று உள்ளது. வருங்காலத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட துறையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் சோனா யுனிவர்சிட்டி என்ற பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியின் போது கல்லூரி துணைத் தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா, முதல்வர் கார்த்திகேயன் உடனிருந்தனர்.

Tags :
× RELATED ரயிலில் கடத்தி வரப்பட்ட 3 கிலோ கஞ்சா பறிமுதல்